கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் இந்திய அளவில் ரூ.32 கோடிக்கு அதிகமாகவும், உலக அளவில் மொத்தமாக ரூ.48.68 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று (ஜூன் 3) திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘விக்ரம்’ திரைப்படம். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நேற்று ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும், தமிழக அரசு சார்பில் படம் வெளியான நாளில் இருந்து 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று ஒரேநாளில் தமிழ்நாட்டில் மட்டும் 20.61 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் ரூ.3.74 கோடியும், கர்நாடகாவில் ரூ.3.96 கோடியும், கேரளாவில் ரூ.5.10 கோடியும் வசூலாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் ரூ.32 கோடியை கடந்த இந்தப் படத்தின் வசூல், உலக அளவில் ரூ.48.68 கோடியை எட்டியுள்ளது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனை திரையில் காணவேண்டும் என்ற அவளும், 4 முன்னணி நடிகர்களின் நடிப்பும், லோகேஷ் கனகராஜின் இயக்கமும் படத்திற்கான ஆவலைத் தூண்டியிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில், தற்போதைய நிலையில் அதிக வசூல் குவித்த பட வரிசையில் ‘விக்ரம்’ திரைப்படம் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் உலக அளவில் ரூ.61 கோடி படைத்து விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படமும், இரண்டாவது இடத்தில் ரூ.50 கோடி வசூலித்த அஜித்தின் ‘வலிமை’ திரைப்படமும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த நாட்களில் விக்ரம் வசூலைப் பொறுத்து, இந்தப் பட்டியல் மாறலாம்.
#விக்ரம் WW பாக்ஸ் ஆபிஸ்
TN – ₹ 20.61 கோடி
AP/TS – ₹ 3.74 கோடி
KA – ₹ 3.96 கோடி
KL – ₹ 5.10 கோடி
ROI – ₹ 1.02 கோடி
OS – ₹ 14.25 கோடி [Reported Locs]மொத்தம் – ₹ 48.68 கோடி
— மனோபாலா விஜயபாலன் (@ManobalaV) ஜூன் 4, 2022