கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி – ஃபகத் ஃபாசில் – கமலஹாசன் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மேலும் சுமார் 560 சென்டர்களில் 650க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று வெளியாகும் விக்ரம் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்கான வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்த திரைப்படம் கமல்ஹாசனின் கலைப் பயணத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகநாயகன் @ikamalhaasan சாரின் #விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சாரை நேரில் சந்தித்து @RedGiantMovies_ சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் #விக்ரம் நிச்சயம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும். @RKFI #மகேந்திரன் pic.twitter.com/V0TWKV9liE
– உதய் (@Udhaystalin) ஜூன் 3, 2022
ஆக்ஷன் திரில்லர் பார்முலாவில் எடுக்கப்பட்ட விக்ரம் திரைப்படத்திற்கு முதல் நாள் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் நல்ல வசூல் ஈட்டும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.