உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் நான்கு வருடங்களுக்கு வெளியாகும் கமல் படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்தப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்தப்படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றன.
‘விக்ரம்’ படம் வேற லெவலில் ஆக்ஷனின் மிரட்டியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஹாலிவுட் தரத்தில் ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் மிரட்டியுள்ளதாகவும் நடிப்பில் அனைவருமே மிரட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து கொண்டாடி வருகின்றனர். இண்டர்வெல் சீனில் மிகப்பெரிய ஹைப் கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
மேலும் அனிருத் பின்னணி இசையில் தெறிக்கவிட்டதாகவும், கண்டிப்பாக இந்தப்படம் லோகேஷின் பென் பாய் சம்பவம் என்றும், சூர்யாவின் எண்ட்ரி வேற மாதிரி என்றும் ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.