விக்ரம்: ‘விக்ரம்’ படம் கண்டிப்பா இதை செய்யுங்கள்.. அடித்து சொல்லும் பிரபலம்..! விக்ரம் படத்தின் வசூல் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்


அண்மை காலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு பின் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவிய நிலையில், கமலின் ‘விக்ரம்’ படம் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தை வினியோகித்த உதயநிதி ஸ்டாலி படத்தின் வசூல் குறித்து இணையத்தில் வைரலாகி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது ‘விக்ரம்’ படம். கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. பரபரப்பான திரைக்கதை அமைப்பினாலும், ஆக்ஷன் காட்சிகளினாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும்’விக்ரம்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நோக்கி விக்ரம் படம் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் கமல்.

திருமணம் முடிந்த மறுநாளே சர்ச்சையில் சிக்கிய விக்கி – நயன்: இப்படியா ஆகணும்.!

மேலும் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்துள்ளார் கமல். இருப்பினும் உதயநிதி ஸ்டாலின் ‘விக்ரம்’ படத்தின் வசூல் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், ‘விக்ரம்’ படத்தின் வசூல் நம்பமுடியாத அளவில் உள்ளது என்றும் இந்த வார இறுதியில் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பல சாதனைகளை முறியடிக்கும் போல் தெரிகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube