ஏற்கனவே விக்ரம் படத்திலிருந்து கமலின் குரலில் பத்தல பத்தல பாடல் வெளியாகி மெகா ஹிட்டாகி இருந்தது. இந்நிலையில் போர்கண்ட சிங்கம் இரண்டாவது பாடலாக வெளிவந்துள்ளது.
இந்த பாடலை கேட்கும்போதே கண்கள் கலங்குவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பத்தல பத்தல பாடலில் கெத்தான வரிகள், அலட்டிக் கொள்ளாத நடனம் மூலம் கமல் மாஸ்ஸாக காட்சியளித்தார். ஆனால் அதற்கு அப்படியே மாற்றமாக போர்கண்ட சிங்கம் பாடலில் சோக உணர்வுகளை கமலை மழையாய் பொழிந்திருக்கிறார்.
கேட்டவர்களுக்கு உடனடியாக பிடித்துள்ள இந்த பாடல் தற்போது லைக்ஸ், ஷேர்களை குவித்து வருகிறது.
இதையும் படிங்க – தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ டிரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்
போர்கண்ட சிங்கம் பாடலின் வழியே விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகப் படுத்தி உள்ளார்.
உணர்கிறேன் #விக்ரம் #பொற்கண்டசிங்கம் பாடல் வீடியோ ➡️ https://t.co/yzNPHTtypj #கமல்ஹாசன் #விக்ரம் ஜூன் 3 முதல் #விக்ரம் அதிரடி@ikamalhaasan @anirudhofficial @Dir_Lokesh @உதய்ஸ்டாலின் @VijaySethuOffl #ஃபஹத் ஃபாசில் #மகேந்திரன் @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @விஷ்ணுஏடவன்1 pic.twitter.com/KzJEO2qJW2
— ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (@RKFI) மே 25, 2022
அதேபோன்று என்ன மாதிரியான கதைக் களம் என்பதை யூகிக்க முடியாத வகையில், போர்கண்ட சிங்கம் பாடல் ட்விஸ்டை ஏற்படுத்தியிருக்கிறது.
அனிருத் இசையில் இந்த பாடலை விஷ்ணு ஏடவன் எழுத ஜி ரவி பாடியுள்ளார். விஷ்ணு எடவன் விக்ரம் படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
யார் அடித்தாரோஅதே அதிர்வு!! கமல் சார்🙏 pic.twitter.com/OwVcY5atQu
– லீ கொலம்பஸ் (@கேப்டன்சாப்10) மே 25, 2022
தலைவரின் கண்களிலேயே வலி தெரிகிறது!😪இந்த பாடலுக்கு, அனைவரின் கண்களும் குளமாக போவது நிச்சயம்!👍💪❤️❤️❤️ #விக்ரம்#விக்ரம் ஹிட்லிஸ்ட்#விக்ரம் அதிரடி#விக்ரம் ஜூன் 3 முதல் 💥💥💥 pic.twitter.com/9pJJXJP5mi
— 🙏மாஸ்க் அணியுங்கள் 🙏 🔦MNM🔦 (@Jahangi32572165) மே 25, 2022
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் அடுத்த மாதம் 3ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
போர்கண்ட சிங்கம் பாடலை யூடியூபில் பாருங்க..
இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடக் கூடியதாக விக்ரம் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.
விக்ரம் படத்தில் மல்டி ஹீரோக்கள் இடம்பெற்றிருந்தாலும், சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.