விஷால்: எம்ஜிஆர் முகத்தை நெஞ்சில் பச்சைக்குத்திய விஷால்… அதுதான் காரணமா? – விஷால் மார்பில் mgr பச்சை குத்தியுள்ளார்


மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உருவத்தை நடிகர் விஷால் தனது நெஞ்சில் வரைந்திருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் அடியெடுத்து வைத்த விஷால் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ஆனால் அதற்குள் நடிகராக வாய்ப்பு கிடைத்தது விஷாலுக்கு செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

கீர்த்தி சுரேஷின் ஹாட் லுக்ஸ்!

கடைசியாக லத்தி

கடைசியாக லத்தி

தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், வெடி, பட்டத்து யானை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், கத்தி சண்டை, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். உள்ளார். கடைசியாக விஷால் நடிப்பில் லத்தி திரைப்படம் வெளியானது.
Azeem: அடடே… அசீம் இவ்வளவு நல்லவரா? என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

நெஞ்சில் எம்ஜிஆர்

நெஞ்சில் எம்ஜிஆர்

தற்போது மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் விஷால். நடிகர் விஷால் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் உள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் தனது நெஞ்சில் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆரின் உருவத்தை பச்சைக் குத்தியுள்ளார். இதனை நடிகர் விஷாலின் மேலாளரான ஹரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Vijay, Keerthy Suresh: ஆபாசத்தின் உச்சம்… ‘சக்களத்தி சண்டை போடும் சங்கீதா- கீர்த்தி’ ஒரு அளவு இல்லையா நெட்டிசன்ஸ்?

உண்மையாகவா? படத்திற்காகவா?

உண்மையாகவா?  படத்திற்காகவா?

அந்த போட்டோவுக்கு புரட்சி தலைவரை நெஞ்சில் பச்சைகுத்தி இருக்கும் புரட்சி தளபதி என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், உண்மையிலேயே எம்ஜிஆர் உருவத்தை விஷால் பச்சைக் குத்தி உள்ளாரா? அல்லது படத்திற்காக வரையப்பட்டதா என்று கேட்டு வருகின்றனர். நடிகர் விஷாலுக்கு ஏற்கனவே அரசியல் ஆர்வம் உள்ளது. 2017 ஆம் ஆண்டு ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
நாக சைதன்யா: தப்பா பேசாதீங்க.. நந்தமுரி பாலகிருஷ்ணாவை விளாசிய சம்முவின் மாஜி கணவர்!

அரசியல் ஆசையா?

அரசியல் ஆசையா?

இருப்பினும் தொடர்ந்து ஏழை மக்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் உதவி செய்த மாணவர்களை அவரது மறைவுக்கு பிறகு தத்தெடுத்துக் கொண்ட விஷால் அவர்களுக்கும் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் எம்ஜிஆரின் உருவத்தை பச்சைக் குத்தியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அரசியல் ஆசையில்தான் எம்ஜிஆரின் உருவத்தை பச்சைக் குத்தியுள்ளாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Keerthy Suresh: இது வேறயா… கீர்த்தி சுரேஷ் குடும்பத்தில் ஒருத்தரான விஜய்… இந்த விஷயம் தெரியுமா?

விஷால்

விஷால்

புரட்சி தளபதிSource link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube