சிஎன்ஜி கார் வாங்கப்போறீங்களா… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… இன்னும் நிறைய கார் அறிமுகமாகபோகுது…

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவிட்ட நிலையில் சிஎன்ஜி கார்கள் பயன்பாடு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மக்கள் பலர் பெட்ரோல் டீசல் கார்களை வாங்குவதை விட ஃபேக்டரி ஃபிட்டிங்கில் வரும் சிஎன்ஜி கார்களை வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிஎன்ஜி கார் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க . . . இன்னும் நிறைய கார் அறிமுகமாகபோகுது . . .

மக்களின் தேவை அறிந்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் கார்களில் சிஎன்ஜி ஆப்ஷனை சேர்த்து விற்பனை செய்து வருகிறது. இப்படியாக நீங்கள் சிஎன் கார் வாங்குவதற்கான திட்டத்தில் இருக்கிறீர்களா? விரைவில் பல புதிய கார்களின் சிஎன்ஜி வேரியன்ட் வெளியாகவுள்ளது. இந்த பட்டியலைத் தான் இங்கே காணப்போகிறோம்

சிஎன்ஜி கார் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க . . . இன்னும் நிறைய கார் அறிமுகமாகபோகுது . . .

மாருதி பலேனோ

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பலேனோ கார் சிறப்பாக விற்பனையாகும் ஒரு காராக இருக்கிறது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்குகின்றனர். பலேனோ காரில் இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ள நிலையில் இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட்டை மாருதி நிறுவனம் விரைவில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சிஎன்ஜி கார் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க . . . இன்னும் நிறைய கார் அறிமுகமாகபோகுது . . .

இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த சிஎன்ஜி வேரியன்ட்டில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என்பது கூடுதல் தகவல்.

சிஎன்ஜி கார் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க . . . இன்னும் நிறைய கார் அறிமுகமாகபோகுது . . .

மாருதி பிரெஸ்ஸா

மாருதி சுஸூகி நிறுவனம் விரைவில் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய அப்டேட்டட் வெர்ஷனை வெளியிட உள்ளது. அதன் பின் அடுத்த அப்டேட்டாக இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎன்ஜி கார் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க . . . இன்னும் நிறைய கார் அறிமுகமாகபோகுது . . .

ஏற்கனவே மாருதி சுஸூகி நிறுவனம் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய எம்பிவி கார்களுக்கு சிஎன்ஜி வேரியன்ட்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது பிரெஸ்ஸா காரிலும் சிஎன்ஜி வேரியன்ட்களை வெளியிடவுள்ளது.

சிஎன்ஜி கார் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க . . . இன்னும் நிறைய கார் அறிமுகமாகபோகுது . . .

டாடா நெக்ஸான்

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்று. இந்த காரில் டிசைன், பாதுகாப்பு அம்சங்கள், தொழிற்நுட்ப வசதிகள் எனப் பல விஷயங்கள் மக்களிடம் இந்த காருக்கான நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிஎன்ஜி கார் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க . . . இன்னும் நிறைய கார் அறிமுகமாகபோகுது . . .

இந்த காருக்கு பெட்ரோல், டீசல், மற்றும் எலெக்டரிக் வேரியன்ட்கள் தற்போது மார்கெட்டில் உள்ளது. எலெக்ட்ரிக் வேரியன்டில் இரண்டாவது மாடல் கூட சமீபத்தில் தான் அறிமுகமானது. இந்நிலையில் இந்த காரின் சிஎன்ஜி வேரியன்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்கும் இது வெளியாகலாம் எனப் பேசப்படுகிறது. சிஎன்ஜி வேரியன்ட்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் வரும் என எதிர்பார்க்கலாம்

சிஎன்ஜி கார் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க . . . இன்னும் நிறைய கார் அறிமுகமாகபோகுது . . .

கியா செல்டாஸ் சிஎன்ஜி

சமீபகாலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள கார் கியா செல்டாஸ் கார். இந்த காரை மக்கள் அதிகம் வாங்கி வருவதால் கியா நிறுவனம் இந்த காரில் சிஎன்ஜி வேரியன்டை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு தற்போது இந்த காரின் சிஎன்ஜி வேரியன்டை தயாரும் செய்துவிட்டது. தற்போது இந்த கார் சோதனையில் இருக்கிறது. இந்த காரின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎன்ஜி கார் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க . . . இன்னும் நிறைய கார் அறிமுகமாகபோகுது . . .

டாடா பஞ்ச்

டாடா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட இந்த காருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. இந்த காருக்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருந்தாலும் மக்கள் இந்த காருக்காக காத்திருக்கத் தயாராக இருக்கிறார்கள். டாடா நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் டாடா பஞ்ச் சிஎன்ஜி வேரியன்ட்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த காரும் சிஎன்ஜி வேரியன்டில் ஆட்டோமெட்டிக் அல்லது மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

சிஎன்ஜி கார் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க . . . இன்னும் நிறைய கார் அறிமுகமாகபோகுது . . .

இந்த பட்டியலில் உள்ள கார்களில் சில கார்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லையென்றாலும் இது வெளியாக வாய்ப்பிருப்பதாக வெளியான தகவல்களை வைத்து வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த சிஎன்ஜி காரை வாங்கப்போகிறீர்கள் என்றால் இந்த கார்களையும் ஆலோசனை பட்டியலில் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இந்த கார்களை வாங்க சில காலம் நீங்கள் காத்திருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube