மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டுமா! இந்த சின்ன தவறுகளை சரிசெய்யுங்கள்! அப்புறம் பாருங்கள் | Spiritual news in tamil: Veedu makilchiyaga irukka parikarangal


Spirtuality

oi-Jeyalakshmi C

சென்னை: நம்முடைய வீட்டை நாம் வைத்திருப்பதை பொறுத்துதான் செல்வம் சேரும். வீடு என்பது அமைதியும் நிம்மதியும் தரக்கூடிய இடம். அந்த இடத்தில் தேவையில்லாத பொருட்களை வைத்திருப்பதால் சண்டை சச்சரவு உண்டாகும். செல்வம் சேரவும், மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கவும் நாம் சில பொருட்களை வைத்திருக்க வேண்டும். சில பொருட்களை தூக்கி தூர எறிந்து விட வேண்டும்.

வீடு அமைதியாக இருக்க வீட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டிய பொருள்களும் கூட இன்ன இடத்தில், இப்படித் தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நியதிகள் இருக்கின்றன. உடைந்த கண்ணாடியை எப்பொழுதும் உபயோகப்படுத்தாதீர்கள்.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..ஒரு வாரத்தில் நல்ல செய்தி..அரசு அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..ஒரு வாரத்தில் நல்ல செய்தி..அரசு அறிவிப்பு

சிலர் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி, லேசாக உடைந்து போயிருக்கும். அதை பத்திரமாக வைத்து உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள். சிக்கன நடவடிக்கை என்பதற்காக, உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்க வேண்டாம். அது எதிர்மறை ஆற்றலைத் தூண்டி செல்வ வளத்தை குறைக்கும். அதைப்போலவே மூக்குக் கண்ணாடி உடைந்து இருந்தாலும், அதை உடனே மாற்றிவிட வேண்டும்.

வடகிழக்கு ஈசான்யம்

வடகிழக்கு ஈசான்யம்

வீட்டின் ஈசான்ய பகுதியில் அதாவது வடகிழக்கு திசையில் இயன்ற அளவு குப்பைகளையோ, வேறு தூய்மையற்ற பொருளையோ போடாதீர்கள். அங்கே எந்த கனமான பொருள்களையும் வைக்காதீர்கள். இயன்ற அளவு ஈசானிய மூலையை சுத்தமாக வைத்திருக்க முயலுங்கள். கண்ணுக்குத் தெரியும் படியாக உடைந்த கட்டில் உடைந்த கம்பிகள் இவை களையெல்லாம் வீட்டில் கண்ணுக்குத் தெரியும் படியாக போட்டு வைக்காதீர்கள். எக்காரணத்தை முன்னிட்டும் உடைந்த அல்லது நசுங்கிய பாத்திரங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

பூஜை அறை சத்தம்

பூஜை அறை சத்தம்

தினமும் பூஜை அறையை நன்கு துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பூஜை அறையில் பயன்படுத்தப்படும் பஞ்ச பாத்திரங்கள், பூஜைத் தட்டு, தீர்த்தம் எடுக்கும் உத்தரணி முதலிய பொருள்கள் உடைந்தும் நசுங்கியும் இருக்கும்படியாக வைத்துக் கொள்ளாதீர்கள். உடைந்துபோன தூப தீப கால்களை பயன்படுத்தாதீர்கள். சாத்திர ரீதியாக சரியல்ல. தவிர பயன்படுத்தும்போது கைகள் சுட்டுவிடும் ஆபத்தும் இருக்கிறது.

ஒட்டடை படியக்கூடாது

ஒட்டடை படியக்கூடாது

பூஜை அறையில் உள்ள படங்களில் ஒட்டடை படிய விட வேண்டாம். அதோடு நீங்கள் பூஜையும் செய்தால் அது சில எதிர்மறை விளைவுகளைத்தான் கொடுக்கும். வீட்டின் வரவேற்பறை, நிலைவாசல் பகுதிகள் இவற்றிலெல்லாம் ஒட்டடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

உடைந்த பொருட்கள்

உடைந்த பொருட்கள்

இயன்ற அளவு விளக்குகளை சுத்தமாகத் துடைத்து பளிச்சென்று இருக்கும் படியாக பார்த்துக் கொள்ளவும்.
சிலர் வீட்டில் மாட்டியிருக்கும் கடிகாரத்தில் கண்ணாடி உடைந்து போயிருக்கும். கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் என்பதால் அதை அப்படியே விட்டுவிட வேண்டாம். ஒன்று, கண்ணாடியை மாற்றுங்கள். இல்லை எனில் கண்பார்வைக்கு தெரியும் படியாக கடிகாரத்தை மாட்டாதீர்கள்.

உடைந்த புகைப்படங்கள்

உடைந்த புகைப்படங்கள்

கிழிந்த படங்களும் உடைந்த கண்ணாடிச் சட்டங்களில் இருக்கும் படங்களையும் பூஜையறையில் வைக்க வேண்டாம். உடைந்த புகைப்படங்களை எக்காரணத்தை கொண்டும் மாட்டி வைத்துக் கொள்ளாதீர்கள். அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அதிலிருந்து பிரதி எடுத்து வேறு படங்களை நன்றாக பிரேம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து எப்பொழுதும் சண்டை சச்சரவுகளாக இருக்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

சத்தம் போடும் கதவுகள்

சத்தம் போடும் கதவுகள்

பழுதுபட்ட கதவுகளை பயன்படுத்த வேண்டாம். நிலைவாசல் கதவின் பிடி அல்லது தாழ்ப்பாள் உடைந்துபோய் இருந்தால் உடனே மாற்றி விடுங்கள். கதவு திறக்கும் பொழுது க்ரீச்…க்ரீச் என சத்தம் வராமல் நன்றாக எண்ணெய் போட்டு பராமரிக்கவும். கதவு திறக்கும் போது சப்தம் வருவது வீட்டின் செல்வ வளத்தை குறைக்கும். உடைந்த ஸ்விட்ச் பாக்ஸ், வயர்களை பயன்படுத்த வேண்டாம். அது வீட்டின் அழகை கெடுப்பது மட்டுமல்ல, ஆபத்தையும் வரவழைக்கும்.

அழுக்கு கறைபடிந்த பொருட்கள்

அழுக்கு கறைபடிந்த பொருட்கள்

சில வீட்டில் டாய்லெட் பேசின் மற்றும் வாஷ் பேசின் அழுக்கு படிந்து கறை யோடு இருக்கும். உடனடியாக இவற்றை சுத்தப்படுத்துங்கள். இந்த அழுக்குகள் கிருமிகளை உண்டாக்கும் அபாயத்தை கொடுக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும். நோயற்ற வாழ்வு வாழ்ந்தாலே குறைவற்ற செல்வம் சேரும். அதுபோல தண்ணீர் ஒழுகுகின்ற குழாய்களை உடனடியாக மாற்றி விடவும். தண்ணீர் ஒழுகி வீணானால் தரித்திரம் வரும் என்று பெரியவர்கள் சொன்னதை மறந்துவிட வேண்டாம்.

எதிர்மறை சக்திகள்

எதிர்மறை சக்திகள்

தலைவாசலுக்கு நேராக காலணிகளை போடவே கூடாது. இயன்ற அளவு அது கண்ணில் படும்படியாக இருக்கக்கூடாது. அக்காலத்தில் வீடுகளில் ரேழிகளில் மறைவாக காலணி வைப்பதற்கு என்று உள்ளடங்கியது போல ஒரு தனி இட அமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். காலணிகளை வீட்டுக்கு வெளியே இயன்ற அளவு மறைவான இடத்தில் ஒழுங்காகப் போட வேண்டும். சில பொருட்களை எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டிலேயே வைத்துக் கொள்ளாதீர்கள். அது எதிர்மறை சக்திகளை ஆகர்ஷணம் செய்து வீட்டில் செல்வ நிலையை குறைக்கும். மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். முன்னேற்றத்தை தடுக்கும். எனவே தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி வீட்டை தூய்மையாக வைத்துக் கொண்டால் நீங்கள் அழைக்காமலேயே, தூய்மையான இடத்தைத் தேடி மகாலட்சுமி வந்துவிடுவாள். இதை பாலோ பண்ணுங்க வீடு சண்டை சச்சரவு இல்லாமல் அமைதிப்பூங்காவாக திகழும்.

English summary

Veedu makilchiyaga irukka parikarangal: (வீடு மகிழ்ச்சியாக இருக்க பரிகாரங்கள்) Wealth depends on what we own in our home. Home is a place of peace and tranquility. Having unwanted items in that space can lead to fights. We need to have certain things to increase wealth and increase happiness and peace. Some items need to be thrown away.

Story first published: Friday, June 10, 2022, 12:53 [IST]





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube