எடை இழப்பு நான்கு உணவு மாற்றங்கள் இரண்டு மடங்கு கொழுப்பை குறைக்க உதவும்


தினமும் ஜிம்மில் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்தாலும் சிலருக்கு உடல் பருமனும், எடையும் அவ்வளவு சீக்கிரம் குறையாது. ஏனெனில் உடற்பயிற்சியோடு, கடுமையான உணவுக்கட்டுப்பாடு உடல் எடையை குறைக்க உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உணவுக்கட்டுப்பாடு என்றதும், கொழுப்பு நிறைந்த மற்றும் கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, ஜூஸை மட்டுமே குடிக்க வேண்டும்.

உண்ணும் உணவில் கவனம் செலுத்தி, வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வருவது உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகிறது. இது மிகவும் எளிதாக தோன்றினாலும், சரியான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது எளிதான காரியம் அல்ல.

உங்கள் எடை இழப்பு பயணத்தை விரைவுபடுத்த உதவும் சில சிறந்த உணவு குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்…

1. பச்சை நிற காய்கறிகள்:

அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்ட கீரைகளை தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் வயிற்றை நிறைவாக வைக்கவும், அடிக்கடி பசி எடுப்பதை குறைக்கவும் உதவுகிறது. இலை வகையைச் சேர்ந்த காய்கறிகள் மற்றும் கீரைகளை 100 கிராம் உணவிற்கு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என கொடுத்துள்ளோம்.

– லெட்யூஸ் – 15 கலோரிகள்

– முட்டைக்கோஸ் – 15 கலோரிகள்

-கீரை – 23 கலோரிகள்

– அஸ்பாரகஸ் – 24 கலோரிகள்

புரோக்கோலி – 24 கலோரிகள்

2. நொறுக்குத்தீனியில் புரோட்டீன்:

மதிய உணவுக்குப் பிறகு இரவு நேர உணவிற்கும் முன்பாக மாலை வேளைகளில் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பானது ஒன்று. அப்படிப்பட்ட சமயத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் இரண்டையும் உள்ளடக்கிய உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் புரதச்சத்து நிறைந்த உணவை சாப்பிடும் போது நிறைவாக உணர்வீர்கள், நிறைய சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.

இளமையிலேயே முதுமையை உணர்கிறீர்களா..? இந்த 4 வகையான நடைப்பயிற்சிகளை டிரை பண்ணுங்க…

3. சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிப்பது:

உணவுக்கு முன்னும், பசிக்கும் போது நிறைய தண்ணீர் பருகுவது உடல் எடையைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த தந்திரமாகும். மூளை பசிக்குறித்து சிக்னல் கொடுப்பது, நீரிழப்பு காரணங்களுக்காக கூட இருக்கும் என நிபுணர்கள் அடிக்கடி கூறுகின்றனர். எனவே உங்களுக்கு பசிக்கும் சமயத்தில் முதலில் தண்ணீர் குடிப்பது உங்களை அதிகமாக சாப்பிடுவதிலிருந்து தடுக்கும். வெறித்தனமான பசி அல்லது ருசியான உணவை சுவைக்கும் முன்பு வெதுவெதுப்பான தண்ணீரை அருந்துவது நல்லது.

food 2

4. வாரத்தில் ஒருமுறையாவது செய்யுங்கள்:

சமீபத்தில் உடல் எடை அதிகமுள்ள நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆண், பெண் யாராக இருந்தாலும் விலங்குகளின் இறைச்சியில் இருந்து கிடைகக்கூடிய புரதத்தை விட, தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதத்தை அதிகம் உட்கொள்ளும் நபர்களின் எடை விரைவில் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது அசைவ உணவுகள் இன்றி முற்றிலும் சைவ உணவை உட்கொள்ளுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.

PCOS உள்ள பெண்களுக்கு பெர்ரி பழங்கள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை…

வெஜிடேரியன் என்றதும் வறுத்த உணவு, நொறுக்குத் தீனிகளை வெளுத்துக்கட்டாமல், பீன்ஸ், பருப்பு வகைகள், பனீர், முழு தானியங்கள் மற்றும் அந்தந்த சீசனில் கிடைக்கூடிய காய்கறிகள் மூலம் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube