விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன? – நியூஸ்18 தமிழ்


அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவில் குரூப் பி மற்றும் குரூப் சி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு வரும் 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னதாக, தொழில்நுட்ப, டிரெட்ஸ் மேன் வீரர் உள்ளிட்ட குரூப் பி, சி காலிப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தலைமை இயக்குநரகம் (அஸ்ஸாம் ரைபிள்ஸ் டைரக்டர் ஜெனரல் அலுவலகம்) வெளியிட்டது.

காலிப் பணியிடங்கள்: 1380.

இதில், தமிழகத்தில் மட்டும் ஹவில்தார், ரைஃபிள்மேன், நயிப் சுபேதார் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 57 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பதவிகளின் எண்ணிக்கை தோராயமானது, நிர்வாக காரணங்களால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான நாட்கள்: www.assamrifles.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 2022, ஜூன் 6 ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும். இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி 2022 ஜூலை 20 நள்ளிரவு 11:59 மணி வரை.

ஜுலை 20ம் தேதிக்குப் பிறகு, விண்ணப்பங்கள் பெறுவதற்கான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும்.

உடல் நிலை அல்லது மருத்துவ காரணங்கள் காரணமாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவு வீரர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும்.

தெரிவு செய்யப்படும் முறை: முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, அனைத்து தேர்வர்களுக்கும் உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். 12 வாரம் முடிந்த கர்ப்பிணி பெண்கள் இத்தேர்வில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள். இதில், தேர்வு பெற்றவர்கள் மருத்துவ தகுதி தேர்வு, ட்ரெட்ஸ்மேன் தேர்வு, எழுத்துத் தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

assam rifle 1

உடற் தகுதித் தேர்வு

அனைத்து தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். இறுதிப் பட்டியலில் இடம் பெற்றவர்கள், நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு: 01/08/2022 அன்றுள்ளபடி, குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01/08/1999 க்குப் பிறகு பிறந்தவர்களும், 1/08/2004-க்கு முன்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

இதையும் படிக்க:

முழு நேர எம்பிஏ பட்டம் பெற்றவர்களா? டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை

இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் மூன்று ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

இதையும் படிக்க: 1 கோடி மாணவர்களுக்குப் பயன்: டிஜிட்டல் திறன் உருவாக்கம் திட்டத்தை மத்திய அரசு

முன்னாள் இராணுவத்தினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து அதிகபட்சமாக மூன்று ஆண்களுக்கு வயது வரம்பு சலுகை உண்டு. இதில், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 8 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 6 ஆண்டுகள் வரை வரம்பு சலுகை உண்டு.

அஸ்ஸாம் ரைபிள்ஸ் டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு
பேரணி 2022

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube