இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் / அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இணையவழியாக நடத்தப்படுவது வழக்கம். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் பணியில் சேரும் தகுதியை பெற முடியும்.
கடந்தாண்டு கொரோனா நோய்த் தோற்று காரணமாக இரண்டாம் கட்ட தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய இரண்டு தேர்வுகளையும் ஒருங்கே நடத்த (December 2021 and June 2022 merged cycles) தேசிய தேர்வு முகமை முடிவெடுத்துள்ளது.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்ப செயல்முறை தொடங்கிய நாள் : 2022, ஏப்ரல் 30
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 2022 மே, 20 மாலை 6 மணி வரை.
ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான கடைசி வாய்ப்பு: மே 21 முதல் 23 வரை
தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் நாள்: பின்னர் அறிவிக்கப்படும்.
மின்னணு அனுமதி நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்யும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும்
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டு வருகினற்ன. https://ugcnet.nta.nic.in / www.nta.ac.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பக்க வேண்டும்.
விண்ணப்பிக் கட்டணம்: பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.
பொதுப் பிரிவிலும், இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு – உச்சநீதிமன்றம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்/ பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.1100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.
மாதிரிப்படம்
கல்வித்தகுதி: பொதுப்பிரிவினர் முதுநிலைப் பட்டப்பிரிவில் 55% மதிப்பெண்களும், மற்றவர்கள் முதுகலைப் பட்டத்தில் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்கவேண்டும் என்பது குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாகும்.
தேர்வு, இரண்டு தாள்களாகப் பிரிக்கப்படும்: தாள் 1 மற்றும் தாள் 2. தேர்வு காலம் மூன்று மணி நேரம். மொத்தம் 150 கேள்விகள். யுஜிசி நெட் தகுதி (Cut-off) மதிப்பெண்களாகத் தாள் I மற்றும் தாள் IIஇல் 40% ஆகவும், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டவர்/பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு/திருநங்கைகளுக்கான தகுதி மதிப்பெண்கள் I மற்றும் II தாள்களில் 35% ஆகவும் உள்ளன. உதவிப் பேராசிரியர் பணிக்கு,குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்ற தேர்வாளர்களில், இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும்.
ONGC நிறுவனத்தில் 3614 அப்ரெண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியானது
அதேசமயம், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைக்குத் தனியாகத் பட்டியல் தயாரிக்கப்படும். இளநிலை ஆய்வு நிதி விருதுக்குத் தனித் தகுதி பட்டியல் மேலே தயாரிக்கப்பட்ட தகுதி பட்டியலில் உள்ள நெட் தகுதி வாய்ந்த தேர்வாளர்களிடமிருந்து தயாரிக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.