மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆண்ட்ரியாவை பிரதானமாக கொண்டு ‘பிசாசு 2’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிப்பது குறித்து கூறிய மிஷ்கின், ‘பலர் தன்னிடம் விரும்பி நடிக்க வேண்டும் என்று கேட்டதாகவும், நடிப்பதற்கு அதிக பணம் தருவதாக கூறியதால் மறுக்க முடியவில்லை என்றும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் ஒரு படத்தை இயக்கும் போது நடிக்க மாட்டேன் என்றும் இயக்கி முடித்து அடுத்த படத்தை ஆரம்பிக்கும் வரை மட்டுமே நடிக்க வரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், நடிப்பதால் பணத்தை தனியாக சேமித்து வைத்திருக்கிறேன் என்றும் அது என் மகளின் திருமணத்திற்காக சேர்த்து இருக்கின்றேன் என்றும் அவர் உருக்கமுடன் கூறியுள்ளார். மேலும், நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணத்திற்கு பின் எனக்கு அழகான மகள் பிறந்தாள்.
பாலிவுட்டில் கலக்கும் தளபதி பட இயக்குனர்: மரண மாஸ் சம்பவம் கன்பார்ம்.!
ஆனால், மகள் பிறந்த சில நாட்களிலேயே மனைவியை பிரிந்துவிட்டேன். எங்களுடைய பிரிவிற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம். என் மனைவி மகளை நன்றாக பார்த்துக் கொள்கிறாள். அதுமட்டுமில்லாமல் அவள் இன்னும் என்னையும் நேசித்துக் கொண்டே இருக்கின்றார் என கேள்விப்பட்டேன் என்று மிகவும் எமோஷனலாகப் பேசினார் மிஷ்கின். அவரின் இந்தப்பேட்டை இணையத்தில் வைரலாகி வருகிறது.