வேற லெவல்ல இருக்கு… புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் கார்!! இந்திய அறிமுகம் எப்போது?


இந்தியாவில் மாதந்தோறும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய எஸ்யூவி கார்களுள் க்ரெட்டாவையும் ஒன்று என கூறலாம். கடந்த 2020 மார்ச் மாதத்தில் புதிய தலைமுறை அப்கிரேடை பெற்றிருந்த க்ரெட்டாவின் விற்பனை அதன்பின் புதிய உச்சங்களை தொட ஆரம்பித்தது. இருப்பினும் சமீப காலமாக விற்பனை மீண்டும் சற்று குறைய ஆரம்பித்துள்ளதால், க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தும் பணியில் ஹூண்டாய் ஈடுப்பட்டு வருகிறது.

வேற லெவல்ல இருக்கு... புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் கார்!! இந்திய அறிமுகம் எப்போது?

இதற்கிடையில் இன்னும் சில ஆண்டுகளில் க்ரெட்டாவின் செயல்திறன்மிக்க வெர்சனாக க்ரெட்டா என் லைன் காரையும் இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தில் ஹூண்டாய் உள்ளது. இந்த நிலையில், க்ரெட்டா என் லைன் கார் சில தோற்ற திருத்தங்கள், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் மற்றும் திருத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்புடன் சர்வதேச அளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வேற லெவல்ல இருக்கு... புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் கார்!! இந்திய அறிமுகம் எப்போது?

வெளிப்புற தோற்ற மாற்றங்கள்

தோற்றத்தை பொறுத்தவரையில், விரைவில் அறிமுகமாகவுள்ள டக்ஸன் காரை போன்று புதிய அகலமான க்ரில் அமைப்பை க்ரெட்டா என் லைன் எஸ்யூவி கார் ஏற்றுள்ளது. க்ரில் அமைப்பில் அடர் கருப்பு நிறத்திலான க்ரோம் உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க பம்பரில் முக்கோண வடிவில் ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க, அவை இரண்டையும் பெரிய மைய காற்று ஏற்பான் இணைக்கிறது.

வேற லெவல்ல இருக்கு... புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் கார்!! இந்திய அறிமுகம் எப்போது?

இதுமட்டுமின்றி, க்ரில் அமைப்பின் மேலேயும் மற்றொரு காற்று ஏற்கும் துளைகளை காண முடிகிறது. காரின் பக்கவாட்டில் புதிய அடிப்பக்க பேனல்கள் மற்றும் சிக்கலான டிசைனில் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் புதிய க்ரெட்டா என் லைன் காரின் பக்கவாட்டில் ‘என் லைன்’ முத்திரையையும் முன்பக்க ஃபெண்டரில் காண முடிகிறது.

வேற லெவல்ல இருக்கு... புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் கார்!! இந்திய அறிமுகம் எப்போது?

பின்பக்கத்தில் சில ஃபேன்ஸியான ஸ்டைலிங் பாகங்களுடன் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபாக்ஸ் சறுக்கு தட்டு உடன் புதிய பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு கீழே இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன. உண்மையில், இத்தகைய எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பானது காருக்கு ஸ்போர்டியான தோற்றத்தை வழங்குகிறது.

வேற லெவல்ல இருக்கு... புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் கார்!! இந்திய அறிமுகம் எப்போது?

உட்புற அம்சங்கள்

உட்புறத்தில் புதிய க்ரெட்டா என் லைன் கார் முற்றிலும் கருப்பு நிறத்தில் கேபினை கொண்டுள்ளது. ஸ்டேரிங் சக்கரம் மற்றும் கியர் க்னாப்பில் சிவப்பு நிற உள்ளீடுகளை காண முடிகிறது. இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்களில் ‘என்’ முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.

வேற லெவல்ல இருக்கு... புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் கார்!! இந்திய அறிமுகம் எப்போது?

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், பழுது கண்காணிப்பான், தானியங்கி பிரேக்கிங் மற்றும் ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி என ஏகப்பட்ட அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்களை பெற்றுள்ளது. இவற்றுடன் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் 360-கோண கேமிரா என வழக்கமான அம்சங்களும் தொடரப்பட்டுள்ளன.

வேற லெவல்ல இருக்கு... புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் கார்!! இந்திய அறிமுகம் எப்போது?

இயந்திர மாற்றங்கள் & வசதிகள்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த புதிய க்ரெட்டா என் லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இயக்க ஆற்றலை அனைத்து 4 சக்கரங்களுக்கும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற லெவல்ல இருக்கு... புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் கார்!! இந்திய அறிமுகம் எப்போது?

ஆனால் 2.0 லி என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் குறித்த விபரங்கள் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. இவற்றுடன் புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் கார் திருத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பையும் பெற்றுள்ளது.

மற்ற அனைத்து நாட்டு சந்தைகளுக்கு முன்பாக, புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடல் முதலாவதாக தென் அமெரிக்க சந்தைகளில் சென்றடைய உள்ளது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube