கவாஸாகி நிஞ்சா 400 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6-க்கு அப்டேடாயிடுச்சு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

முன்னணி ஜப்பானிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி முக்கிய அப்டேட்களுடன் புதிய நிஞ்சா 400 பைக்கை ஐரோப்பாவில் வெளியீடு செய்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக யூரோ-5 மாசு உமிழ்விற்கு இணக்கமான என்ஜின் மற்றும் புதிய நிறத்தேர்வுகள் நிஞ்சா 400 பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

கவாஸாகி நிஞ்சா 400 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6-க்கு அப்டேடாயிடுச்சு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த வகையில் நிஞ்சா 400-இல் பொருத்தப்பட்டுள்ள பிஎஸ்6-க்கு இணக்கமான 399சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 44 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதில் குதிரையாற்றலில் பெரியதாக மாற்றமில்லை என்றாலும், டார்க் திறன் ஆனது 1 என்எம் வரையில் குறைந்துள்ளது. இருப்பினும் டிரான்ஸ்மிஷனுக்கு அதே 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் தான்.

கவாஸாகி நிஞ்சா 400 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6-க்கு அப்டேடாயிடுச்சு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதற்கு உதவியாக ஸ்லிப்பர் க்ளட்ச் தொடரப்பட்டுள்ளது. மற்றப்படி பைக்கின் டிசைனில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. இதன்படி வழக்கமான கருப்பு மற்றும் பச்சை நிறங்களிலேயே நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சில நிறத்தேர்வுகளும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. இரும்பு ட்ரெல்லிஸ் சட்டகத்தின் அடிப்படையில் புதிய நிஞ்சா 400 பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி நிஞ்சா 400 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6-க்கு அப்டேடாயிடுச்சு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

சஸ்பென்ஷனுக்கு 41மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் பின்பக்கத்திலும் உள்ளன. பிரேக்கிங் பணியை இந்த பைக்கில் முன்பக்கத்தில் 310மிமீ டிஸ்க்கும், பின்பக்கத்தில் 220மிமீ டிஸ்க்கும் கவனித்து கொள்கின்றன. இந்திய சந்தையில் தற்சமயம் கவாஸாகி நிஞ்சா 400 பைக் விற்பனையில் இல்லை.

கவாஸாகி நிஞ்சா 400 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6-க்கு அப்டேடாயிடுச்சு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

பிஎஸ்4 மாசு உமிழ்விற்கு இணக்கமான என்ஜின் அனுமதிக்கப்பட்டபோது விற்பனையில் இருந்தது. ஆனால் 2020 ஏப்ரலில் இருந்து அமலுக்குவந்த புதிய மாசு உமிழ்வு விதியினால் நம் நாட்டில் கவாஸாகி நிஞ்சா 400 பைக்கின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டது. ஐரோப்பாவில் 2022 நிஞ்சா 400 பைக்கின் விலை 6,250 பவுண்ட்களாக உள்ளன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.6.04 லட்சமாகும்.

கவாஸாகி நிஞ்சா 400 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6-க்கு அப்டேடாயிடுச்சு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

புதிய அப்டேட் செய்யப்பட்ட நிஞ்சா 400 பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்பது குறித்து தற்போது வரையில் எந்தவொரு அறிவிப்பையும் கவாஸாகி வெளியிடவில்லை. யூரோ-5க்கு இணக்கமான என்ஜினை பெற்றுள்ளதால், விரைவில் கவாஸாகி நிஞ்சா 400 பைக்கின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம். ஏனெனில் யுரோ-5-க்கு நிகரானதே பிஎஸ்6 ஆகும்.

கவாஸாகி நிஞ்சா 400 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6-க்கு அப்டேடாயிடுச்சு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

நிஞ்சா 400 பைக் உடன் இசட்400 மோட்டார்சைக்கிளும் யூரோ-5க்கு ஐரோப்பாவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. நிஞ்சா 400-இல் புதியதாக கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நிறத்தேர்வின் பெயர் கவாஸாகி ரேசிங் குழு உடை ஆகும். இந்த புதிய நிறத்தேர்வுடன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, கவாஸாகி நிறுவனம் பைக்கின் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை மாடர்ன் வண்ண டிஎஃப்டி திரையாக மாற்றியுள்ளது.

கவாஸாகி நிஞ்சா 400 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6-க்கு அப்டேடாயிடுச்சு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இவ்வாறான வழக்கமான மோட்டார்சைக்கிள்களின் அப்டேட்களுக்கு மத்தியில் கவாஸாகி நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு உலகம் முழுவதிலுமே சிறப்பான முறையில் விரிவடைந்து வருகிறது. அதேபோல் எலக்ட்ரிக் பைக்குகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

கவாஸாகி நிஞ்சா 400 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6-க்கு அப்டேடாயிடுச்சு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதன்படி உலகளவில் இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும், கவாஸாகி அதன் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை களமிறக்குகிறது. எலெக்ட்ரோட் என்னும் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த எலக்ட்ரிக் பைக் வருகிற ஜூன் 7ஆம் தேதி உலகளவில் வெளியீடு செய்யப்பட உள்ளது. இதனை சமீபத்தில்தான் கவாஸாகி யுஎஸ்ஏ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கவாஸாகி நிஞ்சா 400 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6-க்கு அப்டேடாயிடுச்சு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த எலக்ட்ரிக் பைக்குடன் ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் ஒன்றையும் கடந்த 2021-22 நிதியாண்டிற்கு உள்ளாக வெளியீடு செய்ய உள்ளதாக கவாஸாகி நிறுவனம் கடந்த 2021இன் இறுதியில் தெரிவித்திருந்தது. ஆனால் இவ்விரு புதிய கவாஸாகி மோட்டார்சைக்கிள்களும் சற்று தாமதமாக நடப்பு 2022 காலாண்டர் ஆண்டு முடிவதற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம்.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube