Worker killed in landslide during construction of drinking water pipe in Madurai CM stalin condolences


மதுரை மாவட்டத்தில்‌ குடிநீர்‌ குழாய்‌ அமைக்கும்‌ பணியின்‌ போது மண் சரிந்து உயிரிழிந்தவரின்‌ குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம்‌ நிதியுதவி வழங்க முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது, மண் சரிந்துவிழுந்ததில் உள்ளே தொழிலாளி ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும், மண் சரிவில் சிக்கிய தொழிலாளியை பொக்லைன் மூலம் மீட்கும் போது அவர் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடிநீர்‌ குழாய்‌ அமைக்கும்‌ பணியின்‌ போது மண் சரிந்து உயிரிழிந்தவரின்‌ குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம்‌ நிதியுதவி வழங்க முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டம்‌, மதுரை வடக்கு வட்டம்‌, சாத்தமங்கலம்‌ உள்வட்டம்‌, விளாங்குடி கிராமம்‌ ராமமூர்த்தி நகர்‌ மெயின்‌ வீதியில்‌, மாநகராட்சி சார்பில்‌ நடைபெற்று வந்த குடிநீர்‌ குழாய்‌ அமைக்கும்‌ பணியின்‌ போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண்சரிவினால்‌ அங்கு பணியில்‌ ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டத்தைச்‌ சேர்ந்த வீரணன்‌ என்ற சதீஷ்‌ (34) என்பவர்‌ உயிரிழந்தார்‌ என்ற தகவலைக்‌ கேட்டு மிகவும்‌ வருத்தமடைந்தேன்‌.

Also Read: சி.பொன்னையன் என்கிற அரசியல் ஆளுமையின் உண்மையான உயரம்..!

உயிரிழந்தவரின்‌ மனைவி திருமதி.தேவி மற்றும்‌ அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, வருத்தத்தையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

இவ்விபத்தில்‌ உயிரிழந்த சதீஷ்‌ குடும்பத்தாருக்கு முதலமைச்சரின்‌ பொதுநிவாரண நிதியிலிருந்து ரூபாய்‌ ஐந்து லட்சம்‌ நிதியுதவி வழங்க உத்திரவிட்டுள்ளேன்‌. மேலும்‌, தமிழ்நாடு அமைப்பு சாரா கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ நலவாரிய நிதியத்திலிருந்தும்‌ ரூபாய்‌ ஐந்து லட்சம்‌ வழங்கப்படும்‌. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube