உலக சுற்றுச்சூழல் தினம் பசுமை முதன்மையாளர் விருது, பரிசு தொகை


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக, மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக பங்காற்றியவர்களுக்கு, உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில், பசுமை முதன்மையாளர் விருது மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வழங்கினார்.  உலக சுற்றுச்சூழல் தினம் 1972ம் ஆண்டு ஐக்கிய நாடுகள்  சபை  ஜூன் 5ம் தேதி கொண்டாட அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, 2022ஆம் ஆண்டு ஒரே ஒரு பூமி என்பதை கருப்பொருளாக கொண்டு சுவீடன் நாடு ஏற்று நடத்துகிறது.  அதிகமான நகரமயமாக்கல், தொழிற்பெருக்கம் மற்றும் நாகரிக மாற்றத்தினால், சுற்றுச்சூழல் மாசடைந்து, பூமியில் வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அரசு முயற்சிகளால் மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவதை திறம்பட கட்டுப்படுத்த இயலாததால், பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது, என்பதால்  பொதுமக்களின் பங்களிப்பை அரசு  பெரிதும் ஊக்குவிக்க பசுமை  முதன்மையாளர் விருது மற்றும் ரூ 1 லட்சம் பரிசு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து,  செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 விண்ணப்பங்கள் பெறப்பட்டு,  பசுமை விருது வழங்கும் தேர்வு குழுவின் மூலம்   3 விண்ணப்பங்கள்  தேர்வு செய்யப்பட்டு அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.  தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேரில் 2 நபர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரால்வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நேச்சர் டெக் நிறுவனத்திற்கு பசுமை  முதன்மையாளர் விருது மற்றும் ரூ1 லட்சம் பரிசுத்தொகை மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத்   வழங்கினார். மேலும், 2021ம் ஆண்டில் ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள் குறித்தும் மற்றும் மதுவினால் ஏற்படும்  தீமைகள் குறித்தும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு மற்றும் சி.பி.எஸ்.சி.பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட  பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஒவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர், மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர்  நிர்மலா ரோஸ் மேரி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன், உதவி ஆணையாளர் (கலால்), லட்சுமணன், பள்ளி மாணவ,மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube