உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான முதல் நாளுக்குரிய அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்பனை ஆகிவிட்ட நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசன் இதுவரை இல்லாத அளவில் ‘விக்ரம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்து வருகிறார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர் பயணம் செய்து புரமோஷன் செய்துவரும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.
அந்த வகையில் துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான பர்ஜ் கலிபா என்ற கட்டிடத்தில் ‘விக்ரம்’ படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியானது. இதனை நேரில் பார்க்க கமல்ஹாசன் துபாய் சென்று இறந்தார். பர்ஜ் கலிபா கட்டிடத்தில் ‘விக்ரம்’ டிரைலர் வெளியான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அட்டகாசமான இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், ஹரிஷ் உத்தமன், காயத்ரி ஷங்கர், ஷிவானி நாராயணன், ஷான்வி ஸ்ரீவத்சவா, ஜி மாரிமுத்து, ரமேஷ்திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் கிருஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் லோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
உலகநாயகன் மற்றும் #விக்ரம் துபாய் மற்றும் புர்ஜ் கலீஃபாவை கையகப்படுத்துங்கள்! #கமல்ஹாசன் #விக்ரம் #விக்ரம் ஜூன் 3 முதல் #விக்ரமாத்.பி.கே @Dir_Lokesh @VijaySethuOffl #ஃபஹத் ஃபாசில் @anirudhofficial #மகேந்திரன் @turmericmediaTM @API படங்கள் @GoldenCinemaGCC @Homescreenent @ரீல் சினிமாஸ் #BlueChipFX pic.twitter.com/pM3J3EIvW6
— ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (@RKFI) ஜூன் 2, 2022