ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்… அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்… விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

இந்தியாவின் மிக விலைக் குறைவான எலெக்ட்ரிக் காராக டாடா டிகோர் இவி இருக்கின்றது. இந்த காருக்கே டஃப் கொடுக்கும் வகையில், மிக மிகக் குறைவான விலையில் ஓர் மின்சார கார் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பிஎம்வி எலெக்ட்ரிக் (PMV). இந்நிறுவனமே இந்தியாவிற்கான மலிவு விலைக் காரை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்காக நிறுவனம் ஓர் மைக்ரோ ரக எலெக்ட்ரிக் காரை தயார் செய்திருக்கின்றது. இரண்டு இருக்கைகளை மட்டுமே கொண்ட அந்த மின்சார வாகனம் வரும் ஜூலை மாதத்தில் இருந்து நாட்டில் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

இந்த வாகனத்தை இந்தியாவின் அடித்தட்டு மக்களாலும் வாங்க முடியும் என கூறப்படுகின்றது. ரூ. 4 லட்சம் என்கிற குறைவான விலையில் அது விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். தற்போது விற்பனையில் உள்ள நாட்டின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரான டிகோர் இவி-யைவிட இது பல மடங்கு குறைவான விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

இந்தியாவில் டாடா டிகோர் இவி ரூ. 12.49 லட்சம் என்கிற ஆரம்ப (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த தொகையில் பிஎம்வி நிறுவனத்தின் மைக்ரோ ரக எலெக்ட்ரிக் காரின் மூன்று யூனிட்டுகள் வாங்கிவிட முடியும். ஈஸ்-இ (EaS-E) என்கிற பெயரிலேயே மலிவு விலை மின்சார கார் நாட்டில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

இதனை அழைக்கும் ஈசி என கூற வேண்டும். இது ஓர் மைக்ரோ ரக எலெக்ட்ரிக் காராகும். இக்கார் பார்ப்பதற்கு மாருதி சுஸுகி ரிட்ஸ் வாகனத்தின் டைனி மாடலைப் போன்று காட்சியளிக்கின்றது. ஆம், ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரின் முன் மற்றும் பின் பக்க ஸ்டைல் லேசாக ரிட்ஸை ஒத்தவாறு காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில், காரை கவர்ச்சியானதாக காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் பிற அம்சங்கள் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் காட்சியளிக்கின்றன.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

அந்தவகையில் காரின் முகப்பு பகுதியில் இடம் பெற்றிருக்கும் ஹெட்லைட், க்ரில், க்ரில்லிற்கு மேலே இடம் பெற்றிருக்கும் கோடுகள் போன்ற ஒளிர கூடிய லைட் உள்ளிட்டவை வேற லெவல் தோற்றத்திற்கு ஈஸ்-இ வாகனத்தை எடுத்துச் சென்றிருக்கின்றன. இதேபோல், காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீல்களுக்கும் கருப்பு நிறத்தில் மிகவும் அட்டகாசமானதாகக் காட்சியளிக்கின்றன.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

இந்த வெளிப்புற தோற்றமே காரின் பக்கம் மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அலாய் வீல் 13 அங்குலம் கொண்டது. இது இரண்டு பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய கார் என நாங்கள் மேலே கூறியிருந்தோம். ஆகையால், இரு இருக்கைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக இடம் பெற்றிருக்கின்றன. பின்னிருக்கை பயணிகள் சுலபமாக இறங்கி-ஏறுவதற்காக பின் பக்கத்திற்கென இரு கதவுகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

அதாவது, ஒட்டுமொத்தமாக இருவர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த காரில் நான்கு கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின் பக்கத்தில் கருப்பு நிற பேனல் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்பக்கமும் மிக அட்டகாசமானதாகக் காட்சியளிக்கின்றது.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

முழு டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஃப்ரீ-மவுண்டட் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிமோட் கீ-லெஸ் என்ட்ரீ, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், மேனுவல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார்கள் போன்ற அம்சங்கள் அம்சங்கள் பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

இதேபோல், இந்த வாகனத்தில் 15 kW (20 பிஎச்பி) பவரை வெளியேற்றும் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ ஆகும். இதற்கு தேவையான மின்சார திறனை வழங்குவதற்காக 10 kWh லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

இக்காரை வெவ்வேறு விதமான வேரியண்டுகளில் பிஎம்வி நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. 120 கிமீ – 200 கிமீ ஆகிய ரேஞ்ஜ் திறன்களில் இ-கார் விற்பனைக்குக் கிடைக்கும். 3 kW AC சார்ஜரில் வைத்தே ஈஸ்-இ வாகனத்தை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில், சார்ஜ் செய்யும்போது சுமார் 2 மணி நேரங்கள் வரை முழுமையாக சார்ஜாக அவ்வாகனம் எடுத்துக் கொள்ளும்.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

இத்தகைய மிக சூப்பரான மின்சார காரையே மும்பையைச் சேர்ந்த பிஎம்வி நிறுவனம் நாட்டில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இக்காரின் முன் பதிவு பணிகளை நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ. 2 ஆயிரமே முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

ரூ. 2 ஆயிரம் இருந்தா இந்த மின்சார காரை புக் செய்யலாம்... அடித்தட்டு மக்களாலும் இந்த மின்சார காரையும் வாங்க முடியும்... விலையும் ரொம்ப ரொம்ப மலிவு!

இப்போது புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் 2023ம் ஆண்டு இரண்டாம் காலாண்டிற்குள் வாகனத்தை டெலிவரி கொடுக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இக்காரை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை போல் டைரக்ட்-டூ-கஸ்டமர் எனும் திட்டத்தின்கீழ் டெலிவரி செய்ய இருக்கின்றது. அதாவது இடைத்தரகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் போன்ற எந்த சிக்கலும் இல்லாமல் மின்சார காரை நிறுவனம் விற்பனைச் செய்ய இருக்கின்றது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube