முன் பணமே இல்லாமல் இந்த பிஎம்டபிள்யூ பைக்கை வாங்க முடியும்… மாத தவணையும் ரொம்ப ரொம்ப கம்மியா செலுத்தலாம்!

பிரபல பிரீமியம் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad), விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கும் தனது புதுமுக மோட்டார்சைக்கிளுக்கு ப்ரீ-லான்ச் புக்கிங்கை தொடங்கி வைத்துள்ளது. அதாவது, விற்பனைக்கு வருவதற்கு முன்னரே இருசக்கர வாகனத்திற்கான முன்பதிவு பணிகளை அது தொடங்கியிருக்கின்றது.

முன் பணமே இல்லாமல் இந்த பிஎம்டபிள்யூ பைக்கை வாங்க முடியும்... மாத தவணையும் ரொம்ப ரொம்ப கம்மியா செலுத்தலாம்!

நிறுவனம் வெகு விரைவில் ஜி 310 ஆர்ஆர் (BMW G 310 RR) எனும் பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த மோட்டார்சைக்கிள் வரும் ஜூலை 15ம் தேதி அறிமுகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

முன் பணமே இல்லாமல் இந்த பிஎம்டபிள்யூ பைக்கை வாங்க முடியும்... மாத தவணையும் ரொம்ப ரொம்ப கம்மியா செலுத்தலாம்!

இந்த நிலையிலேயே பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் புதுமுக இருசக்கர வாகனத்தின் பக்கம் டூ-வீலர் பிரியர்களைக் ஈரக்கும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையில் சமீபத்தில் புதிய ஜி 310 ஆர்ஆர் பைக்கின் டீசர் படங்களை அதிகாரப்பூர்வ வலை தளப்பக்கங்களில் ஊடாக அது வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது அதிகாரப்பூர்வமாக பைக்கிற்கான ப்ரீ-லான்ச் புக்கிங்கை தொடங்கி வைத்துள்ளது.

முன் பணமே இல்லாமல் இந்த பிஎம்டபிள்யூ பைக்கை வாங்க முடியும்... மாத தவணையும் ரொம்ப ரொம்ப கம்மியா செலுத்தலாம்!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் டீலர்ஷிப் ஷோரூம் அல்லது ஆன்லைன் வாயிலாக பைக்கிற்கான முன் பதிவுகளை மேற்கொள்ள முடியும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனம் ஏற்கனவே செய்துவிட்டது. பைக்கை புக் செய்பவர்களுக்கு 2022 ஜூலை மாதத்திற்கு உள்ளாகவே டெலிவரி வழங்கப்பட இருப்பதாக பிஎம்டபிள்யூ மோட்டாராட் தெரிவித்துள்ளது.

முன் பணமே இல்லாமல் இந்த பிஎம்டபிள்யூ பைக்கை வாங்க முடியும்... மாத தவணையும் ரொம்ப ரொம்ப கம்மியா செலுத்தலாம்!

தொடர்ந்து, பைக்கின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஜீரோ டவுண் பேமென்ட், ரூ. 3,999 என்ற குறைவான மாத தவணை திட்டம் மற்றும் இன்சூரன்ஸ் – அக்ஸசெரீஸ்களுக்கும் கடன் உள்ளிட்ட ஸ்பெஷலான திட்டங்களை வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன் பணமே இல்லாமல் இந்த பிஎம்டபிள்யூ பைக்கை வாங்க முடியும்... மாத தவணையும் ரொம்ப ரொம்ப கம்மியா செலுத்தலாம்!

வாடிக்கையாளர்கள் தங்களுக்கான ப்ரீ புக்கிங்கை செய்யும்போதே, கடன் திட்டத்திற்கும் சேர்த்தே விண்ணப்பித்துக் கொள்ள முடியும். பிஎம்டபிள்யூ-வின் இந்த மோட்டார்சைக்கிள் டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை ரீ-பேட்ஜ் செய்து அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்றுகூட கூறலாம்.

முன் பணமே இல்லாமல் இந்த பிஎம்டபிள்யூ பைக்கை வாங்க முடியும்... மாத தவணையும் ரொம்ப ரொம்ப கம்மியா செலுத்தலாம்!

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த பைக்கை ஆரம்ப நிலை இருசக்கர வாகனமாக இந்தியாவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஆகையால், சற்று குறைவான விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேலையில், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மோட்டார்சைக்கிளிடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிப்பதற்காக கணிசமான புதிய அம்சங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜி 310 ஆர்ஆர் பைக்கில் சேர்த்துள்ளது.

முன் பணமே இல்லாமல் இந்த பிஎம்டபிள்யூ பைக்கை வாங்க முடியும்... மாத தவணையும் ரொம்ப ரொம்ப கம்மியா செலுத்தலாம்!

இதற்கு பைக்கின் பின் பக்கமே சான்று. சற்று மாறுபட்ட அம்சங்கள் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய ஸ்டிக்கர்கள் மற்றும் சற்று மாறுபட்ட பேனல்களால் இருசக்கர வாகனம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சஸ்பென்ஷன், பிரேக், வீல்கள், சேஸிஸ் மற்றும் எஞ்ஜின் விஷயத்தில் இரு பைக்குகளும் ஒரே மாதிரியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன் பணமே இல்லாமல் இந்த பிஎம்டபிள்யூ பைக்கை வாங்க முடியும்... மாத தவணையும் ரொம்ப ரொம்ப கம்மியா செலுத்தலாம்!

தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 312.2 சிசி திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரே பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கிலும் இடம் பெற இருப்பதாக தெரிவிக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகமாகும் பட்சத்தில் கேடிஎம் ஆர்சி 390, கவாஸாகி நிஞ்ஜா 300 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக அமையும்.

குறிப்பு: டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube