ஏதாவது ஒரு கலர் கம்மியா இருக்கா? தப்பி தவறி கூட இந்த கலரை வாங்கீர கூடாது… இந்த ஹெட்டிங்க்கு ஏத்த மாதிரி


கார் என்பது ஒரு சொத்து தான் என்றாலும் காரை வாங்கியது முதல் அந்த சொத்தின் மதிப்பு குறைந்து கொண்டே தான் இருக்கும். அதாவது காரின் பயன்பாட்டிற்கு ஏற்ப தேய்மானம் ஆகும் என்பதால் காரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கும். காரின் பயன்பாட்டைப் பொருத்தும், பராமரிப்பைப் பொருத்தும், காரின் மதிப்பு குறையும் வேகத்தைக் குறைக்கலாமே தவிர காரின் மதிப்பு குறையாமல் வைக்க முடியாது. அதேநேரத்தில் காருக்கான டிமாண்ட் மற்றும் சப்ளே பொருத்தும் அதன் விலை மாறுபடலாம் மிக அரிய வகை கார் என்றால் அதன் விலை வாங்கிய விலையிலிருந்து அதிகமாகக் கூட சில நேரங்களில் செல்லும்.

எந்த கலர்ல கார் வாங்குனா தேய்மானம் குறைவாக இருக்கும்? தப்பி தவறி கூட இந்த பிரெளன் கலரை வாங்கீர கூடாது!

இப்படியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் காருக்கான தேய்மானம் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் எந்த நிற கார்களுக்கு தேய்மானம் குறைவாக இருக்கிறது என ஆய்வு நடத்தப்பட்டது. வட அமெரிக்கா முழுவதும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரின் நிறத்தின் பொறுத்து அதன் தேய்மானம் மாறுபடுவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

எந்த கலர்ல கார் வாங்குனா தேய்மானம் குறைவாக இருக்கும்? தப்பி தவறி கூட இந்த பிரெளன் கலரை வாங்கீர கூடாது!

அதன்படி வட அமெரிக்காவில் 3 நிற கார்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. கருப்பு, வெள்ளை, மற்றும் சில்வர், இந்த மூன்று நிறங்களிலுமே மாற்றம் உள்ளது. இந்த ஆய்வின்படி ஒரு கார் சராசரியாக அது வாங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 15 சதவீதம் தேய்மானம் ஆகிறது. இதே காலகட்டத்தில் சில்வர் நிற காரை பொருத்தவரை மொத்தம் 14.8 சதவீதமும், வெள்ளை நிற காரை பொருத்தவரை 15.5 சதவீதமும், கருப்பு நிற காரை பொருத்தவரை 16.1 சதவீதமும் தேய்மானம் ஆகியுள்ளது.

எந்த கலர்ல கார் வாங்குனா தேய்மானம் குறைவாக இருக்கும்? தப்பி தவறி கூட இந்த பிரெளன் கலரை வாங்கீர கூடாது!

மேலும் இந்த காரில் சில ருசிகர தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. மஞ்சள் நிற கார்கள் தான் இருப்பதிலேயே குறைவான தேய்மானம் கொண்ட காராக இருந்துள்ளது. இந்த நிற கார்கள் சராசரியாக ஆண்டிற்கு 4.5 சதவீதம் மட்டுமே தேய்மானம் ஆகியுள்ளது. அதே நேரத்தில் அதிகமான தேய்மானம் ஆன கார் என்றால் அது பிரெளன் நிற காராக இருக்கிறது. இந்த நிற கார்கள் ஆண்டிற்கு 17.8 சதவீதம் வரை தேய்மானம் ஆகியுள்ளது என ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

எந்த கலர்ல கார் வாங்குனா தேய்மானம் குறைவாக இருக்கும்? தப்பி தவறி கூட இந்த பிரெளன் கலரை வாங்கீர கூடாது!

மற்றொருமொரு சுவாரஸ்யமான தகவல்களும் இந்த அறிக்கையில் உள்ளது. அதிக செயல்திறன் கொண்ட எக்ஸ்க்ளூசிவ் கார்களுக்கு மற்ற சாதாரண கார்களை ஒப்பிடும் போது தேய்மானம் மிகக் குறைவாக நிகழ்ந்துள்ளது. இந்த ஆய்வில் சில மஞ்சள் நிற கார்கள் 2.7 சதவீதம் வரை அதன் மதிப்பு வாங்கிய விலையிலிருந்து உயர்ந்தும் உள்ளது. மஞ்சள் நிற கார்கள் தான் இருப்பதிலேயே குறைவான தேய்மானத்தைப் பெற்ற காராக இருந்துள்ளது. சில மஞ்சள் கார்கள் வாங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்பும் பெரிய அளவில் தேய்மானம் ஆகாமலேயே இருந்துள்ளது.

எந்த கலர்ல கார் வாங்குனா தேய்மானம் குறைவாக இருக்கும்? தப்பி தவறி கூட இந்த பிரெளன் கலரை வாங்கீர கூடாது!

அடுத்தாக குறைவாகத் தேய்மானம் ஆவது ஆரஞ்ச் நிற கார். மஞ்சள் நிறத்திற்கு அடுத்தபடியாக இந்த நிற கார்கள் தான் குறைவான அளவிற்குத் தேய்மானம் ஆகியுள்ளதாக இந்த ஆய்வு சொல்கிறது. இந்த ஆய்வில் ஆரஞ்ச் நிற கார்கள் சராசரியாக மூன்று ஆண்டில் 10.7 சதவீதம் மட்டுமே தேய்மானம் ஆகியுள்ளது. கார்களில் ஆரஞ்ச் நிறத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் மற்றும் அதிக செயல் திறன் கொண்ட சொகுசு கார்களில் மட்டுமே இது பயன்படுத்தப்படும். தற்போது சில சாதாரண கார்களிலும் இந்த நிறம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

எந்த கலர்ல கார் வாங்குனா தேய்மானம் குறைவாக இருக்கும்? தப்பி தவறி கூட இந்த பிரெளன் கலரை வாங்கீர கூடாது!

இந்த ஆய்வு வட அமெரிக்க மக்கள் கார் வாங்கும்போது நிறத்தைத் தேர்வு செய்வதில் குழம்புவதாக வந்த பிரச்சனையை அடுத்து நிறத்தால் காரின் திறனில் மாற்றம் இருக்கிறதா எனச் சோதனை செய்ய நடத்தப்பட்ட ஆய்வு. இதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே மாதிரியான தாக்கம் தான் இந்தியாவிலும் இருக்கும் எனச் சொல்லிவிட முடியாது.

எந்த கலர்ல கார் வாங்குனா தேய்மானம் குறைவாக இருக்கும்? தப்பி தவறி கூட இந்த பிரெளன் கலரை வாங்கீர கூடாது!

காரின் தேய்மானத்தைப் பொருத்தவரை, காரை பயன்படுத்தும் முறை, பராமரிக்கும் முறை, பயன்படுத்தும் சாலையின் தரம், ஏன் தட்ப வெப்ப நிலை கூட காரணமாக இருக்கலாம். இந்த ஆய்வில் கூறப்பட்ட அளவிலான தேய்மானங்கள் தான் இந்தியாவிற்கும் பொருந்தும் எனச் சொல்லிவிட முடியாது. இந்தியாவின் சாலைகள், தட்பவெப்ப நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் மாறுபடும். இந்த ஆய்வில் நமக்கு ஒரு சுவாரஸ்யமான தகவலை மட்டுமே தந்துள்ளது. இப்படிப்பட்ட ஆய்வை இந்தியாவில் நடத்தினால் தான் உண்மை தெரியும்

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube