உங்கள் வீரர்கள் ஸ்ட்ரைக் ரேட்டைப் பராமரிக்க வேண்டும்- ராகுல் டிராவிட் , டாப் 3 பேட்டர்கள் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க வேண்டும்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் ராகுல் திராவிட் டாப் 3 இந்திய பேட்டர்கள் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார்.

ஐபிஎல் 2022 தொடரில் ரோஹித் 14 ஆட்டங்களில் 268 ரன்களுடன் சீசனை முடித்தார், கோலி 16 போட்டிகளில் 341 ரன்கள் மட்டுமே எடுத்தார்; முறையே 120 மற்றும் 116 ஸ்ட்ரைக் ரேட்களுடன். முதல் ஆறு ஓவர்களில் ரன்களை அடிக்கும் அவர்களின் அணுகுமுறை, அதாவது பவர் பிளேயில் அவர்களது ஆட்டம் பேசுபொருளாக மாறியது. டாப்-ஆர்டர் பேட்டர்கள் என்பதால், ஐபிஎல் 2022 இல் பெரும்பாலான ஆட்டங்களில் இவர்களால் நல்ல தொடக்கத்தினை வழங்க முடியவில்லை.

இருப்பினும், இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியாவுக்கு விமானம் ஏறுவதற்கு முன், இந்திய அணி நிர்வாகம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்கள் மோசமான பார்மில் இருந்து வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.டெல்லியில் வியாழக்கிழமை தொடங்கும் தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் டாப் 3 ரோல் பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறும்போது, ​​“இது அதிக ஸ்கோரிங் விளையாட்டாக இருந்தால், டாப் 3 வீரர்கள் ஸ்ட்ரைக் ரெட்டைப் பராமரிக்க வேண்டும். விக்கெட் மிகவும் சவாலானதாக இருந்தால், அதற்கு அவர்கள் சரியான முறையில் ஆட வேண்டும்.

பொதுவாக, டி20யில் வீரர்கள் பாசிட்டிவ் ஆக விளையாட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், அவர்கள் அதைச் செய்வார்கள். நான் சொன்னது போல் அவர்களின் ரோல்கள் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கலாம். அவர்களின் ரோல் என்றால் நாங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம்.

மேலும் முதல் மூன்று இடங்களில் உள்ள எவரும் போட்டியின் சூழ்நிலைக்கு ஆட வேண்டும் என்று நான் சந்திக்கிறேன்,
எங்கள் முதல் மூவரின் தரம் எங்களுக்குத் தெரியும். அவர்கள் டாப் கிளாஸ் வீரர்கள். இந்த தொடரில் முதல் மூன்று இடங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும் ஆனால் நாங்கள் தேடுவது (பொதுவாக) ஒரு நல்ல பாசிட்டிவ் ஆன தொடக்கம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது,” இவ்வாறு திராவிட் கூறினார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube